தகிக்கும் வெயில்: வெறிச்சோடியது புதுச்சேரி கடற்கரை

புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து வாட்டி வதைக்கும் வெயிலால் கடற்கரை, கடைவீதிகள் வெறிச்சோடியது.
கடும் வெயில் காரணமாக, புதுவை தலைமைச் செயலகம் எதிரே புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரைப் பகுதி.
கடும் வெயில் காரணமாக, புதுவை தலைமைச் செயலகம் எதிரே புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரைப் பகுதி.


புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து வாட்டி வதைக்கும் வெயிலால் கடற்கரை, கடைவீதிகள் வெறிச்சோடியது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித்தது. தொடர்ந்து 26 நாள்கள் மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயிலின் தாக்கம், கடந்த மே 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனுடன் வெப்பத்தின் தாக்கம் நீங்கும் என எண்ணி மக்கள் மகிழ்ந்த நிலையில், கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் மக்களை வாட்டத் தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் முடிந்து 13 நாள்களாகியும் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. மேலும், கத்திரி வெயில் காலத்தைக் காட்டிலும் தற்போதுதான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் கடந்தாண்டு அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்தாண்டு 109 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், நிகழாண்டு அதிகபட்சமாக கடந்த 8, 9-ஆம் தேதிகளில் 104.18 டிகிரியும், 10-ஆம் தேதி 101 டிகிரியும், 11-ஆம் தேதி 104 டிகிரியும் வெயில் பதிவானது. 12-ஆம் தேதி 102 டிகிரி வெயில் பதிவானது.
கடந்த 10-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல் அனல் காற்றுடன் அதீத வெப்பம் நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். கடும் வெப்பத்தால் வழக்கமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com