நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கையா? நீதிபதிகள் கேள்வி

நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனதால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா என்று காவல்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கையா? நீதிபதிகள் கேள்வி


சென்னை: நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனதால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா என்று காவல்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

4 மாதத்துக்கு முன்பு காணாமல் போன தனது மகளைக் கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தாயார் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கை இப்படித்தான் இருக்குமா? 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்ணை தேடுவதில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

மாத சம்பளம் வாங்கும் காவல்துறையினர், அதற்கான பணியை செய்ய வேண்டும். காவல்துறையினரின் வீட்டில் அல்லது உறவினர்கள் வீட்டில் யாரேனும் காணால் போனால் சாதாரணமாக எடுத்துக் கொள்வீர்களா?

நயன்தாரா போன்று நடிகைகள் யாராவது காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com