Enable Javscript for better performance
அங்கன்வாடி பணியாளர் இடமாற்ற விவகாரம்: மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அங்கன்வாடி பணியாளர் இடமாற்ற விவகாரம்: மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு

    By DIN  |   Published on : 14th June 2019 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    அங்கன்வாடிப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட பெண்கள், அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஜூலை 17 -ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
    கடந்த 3 -ஆம் தேதி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அன்ன லெட்சுமி என்பவர் வலயப்பட்டி அங்கன்வாடியில் ஊழியராக  நியமிக்கப்பட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அவரை மறுநாளே அருகிலுள்ள மற்றொரு கிராமமான கிழவநேரிக்கு இடமாற்றம் செய்தது. இதேபோல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஜோதி லெட்சுமி என்பவரும் மதிப்பனூர் கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பட்டியலின மக்கள் செய்யும் உணவுகளை தங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கூறியதால் இந்தப் பிரச்னை உருவானதாக கூறப்படுகிறது. 
    மனித உரிமை ஆணையம் கேள்வி: இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தார் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர், நீதிபதி துரை.ஜெயச்சந்திரன். மேலும் இடமாற்ற அழுத்தத்துக்கு பணிந்து மாவட்ட நிர்வாகம்  இட மாற்றம் செய்தது ஏன்? மாவட்ட நிர்வாகத்தின் இந்தச் செயல் மனித உரிமை மீறல் இல்லையா? இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை ஜூலை 17 -ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai