சுடச்சுட

  

  தமிழில் பேசக் கூடாது.. சுற்றறிக்கை வாபஸ்; புதிய சுற்றறிக்கை என்ன சொல்கிறது?

  By DIN  |   Published on : 14th June 2019 02:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  southern_railway


  சென்னை: தமிழகத்தில் ரயில்வே நிலைய கட்டுப்பாட்டாளர்கள், அதிகாரிகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

  தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில் நிலைய மேலாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியே தகவல்களை பரிமாற வேண்டும். தமிழில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே நேற்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

  இந்த சுற்றறிக்கைக்கு தமிழறிஞர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

  இந்த நிலையில், தமிழில் பேசக் கூடாது என்று வலியுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுள்ள தெற்கு ரயில்வே, இரண்டு அதிகாரிகள் பேசும் போது, இருவருக்கும் புரியும் ஒரு மொழியில் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai