சுடச்சுட

    

    விக்ரவாண்டி எம்எல்ஏ ராதாமணி உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

    By DIN  |   Published on : 14th June 2019 01:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin

     

    உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த விக்ரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராதாமணியின் குடும்பத்தினருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

    முன்னதாக எம்எல்ஏ ராதாமணி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை சிந்திக்க வைக்கும் வகையில் ராதாமணி பேரவையில் பேசுவார். ராதாமணி மறைவு திமுகவுக்கு பேரிழப்பு என்று கூறினார்.

    விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 67.

    புற்றுநோய் பாதிப்பு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    2016 சட்டப்பேரவைத் தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாமணி திமுக மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது 

    ராதாமணியின் மறைவுக்கு திமுக-வினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai