சுடச்சுட

  

  அறுவை சிகிச்சையின் போது பாலியல் தொந்தரவு: பாதிக்கப்பட்ட பெண்ணின் பகீர் புகார்

  By ENS  |   Published on : 14th June 2019 03:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  operation

   

  சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக லேப் டெக்னீஷியனாக இருந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: 
  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண், கால் மூட்டு அறுவை சிகிச்சைக்காக, சென்னை பெருங்குடியில் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் கடந்த 6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

  இந்நிலையில், அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தப்பட்டு, மயக்கத்தில் இருந்தபோது அந்த மருத்துவமனையில் பணியாற்றும், குடியாத்தத்தைச் சேர்ந்த டில்லிபாபு (22), பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து அந்தப் பெண், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, டில்லிபாபுவை புதன்கிழமை கைது செய்தனர்.

  தனக்கு நேர்ந்த அவலம் குறித்து அப்பெண் கூறுகையில், அறுவை சிகிச்சைக்காக எனக்கு அனஸ்தீஸியா கொடுக்கப்பட்டது. இடுப்புக்குக் கீழே மறத்துப்போனது. ஆனால் முழித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆக்ஸிஜன் மாஸ்க் பொறுத்தப்பட்டிருந்தது.

  மருத்துவர்களும் செவிலியர்களும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, லேப் டெக்னீஷியன் எனது தலைக்கு அருகே வந்து நின்று கொண்டு என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். மாஸ்க் இருந்ததால் என்னால் கத்தவும் முடியவில்லை.

  அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல், போக்குவரத்துக் காவலர்கள் இரண்டு பேரை அழைத்து வந்து என்னிடம் பேச வைத்தார்கள்.

  அப்போதும் புகார் கொடுப்பதில் நான் தீவிரம் காட்டி காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்த போதும், பாதிக்கப்பட்ட பெண் மனநோயாளி என்று காவல்துறையிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

  அப்போது அப்பெண்ணின் மருத்துவ அறிக்கைகளைப் படித்த பிறகே காவல்துறையினர், அப்பெண் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தது தெரிய வந்ததை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி, லேப் டெக்னீஷியனாக இருந்த டில்லி பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai