தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது: நடிகர் ராதாரவி

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது: நடிகர் ராதாரவி


தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
திமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து சேலத்தில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுகவின் இரட்டைத் தலைமை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. திமுகவில் இருந்தபோது என்னை சுமை தூக்க மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் அதிமுகவில் என்னை அப்படி விடமாட்டார்கள்.  அரசியலில் பிரச்னை உள்ளது போலவே நடிகர் சங்கத்திலும் பிரச்னை உள்ளது. முன்பு விஜயகாந்த், சரத்குமார் எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக இருந்தோம். 
எந்த உறுப்பினரையும் நீக்கவில்லை. ஆனால், தற்போது 200-க்கும் மேற்பட்டோர் மன்னிப்பு கடிதம் வழங்கியும் நீக்கியவர்கள் சங்கத்தில் சேர்க்கப்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பதே எனது விருப்பமாகும். தற்போது போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான அணி நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com