நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு:  விசாரணை ஒத்திவைப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும்  19-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு:  விசாரணை ஒத்திவைப்பு


தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும்  19-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சங்க உறுப்பினர் ஏழுமலை தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் நடத்த வேண்டும். 
கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்து விட்டது. இந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றாமல், அதே நிர்வாகிகள் தொடர்ந்து பதவி வகித்தனர். 
சர்வாதிகாரிகளைப் போன்று செயல்படும் இந்த நிர்வாகிகளைக் கேள்வி கேட்கும் உறுப்பினர்களைச் சங்கத்தில் இருந்து நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் நீக்கம் செய்தனர். தற்போது கூட  உறுப்பினர்கள் பட்டியலை முறையாகத் தயாரிக்காமல் தேர்தலை நடத்த உள்ளனர். எனவே இந்தத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க தற்காலிகக் குழு ஒன்றை அமைத்து, அதன்பின்னர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து மரணம் அடைந்தவர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும்  19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com