சுடச்சுட

  
  sun

  தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. 

  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: அதிகபட்சமாக, திருத்தணி, மதுரை தெற்கில் தலா 106 டிகிரி வெப்பம் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 105 டிகிரி, வேலூர், மதுரையில் தலா 104 டிகிரி, நாகப்பட்டினம், திருச்சியில் தலா 102 டிகிரி, கடலூர், பரங்கிபேட்டையில் தலா 101 டிகிரி வெப்பநிலை பதிவானது.

  மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 70 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 50 மி.மீ., திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம் கலவையில் தலா 40 மி.மீ., கடலூர் மாவட்டம் நெய்வேலி, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 30 மி.மீ. மழைபதிவானது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai