அந்த நல்ல செய்தி வந்துவிட்டது: சென்னையில் மழையில்லாத நாட்கள் முடிவுக்கு வரவிருக்கிறது

சென்னையில் மழையில்லாத நாட்களின் எண்ணிக்கை ஒரு வழியாக முடிவுக்கு வரவிருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
அந்த நல்ல செய்தி வந்துவிட்டது: சென்னையில் மழையில்லாத நாட்கள் முடிவுக்கு வரவிருக்கிறது


சென்னை: சென்னையில் மழையில்லாத நாட்களின் எண்ணிக்கை ஒரு வழியாக முடிவுக்கு வரவிருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று தினந்தோறும் வரும் தலைப்புச் செய்திகள், கோடை வெப்பத்தில் வாடிப் போயிருக்கும் தமிழக மக்களை மேலும் வாடி வதங்கச் செய்யும்.

ஆனால், அனல் காற்றினில் வாடிப் போனவர்களைக் கூட துள்ளி குதிக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு வெதர்மேன் இன்று ஒரு பதிவினை இட்டுள்ளார்.

அதாவது, சென்னையில் மழை இல்லாமல் 196வது நாளை தொட்டு விட்டோம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் இந்த எண்ணிக்கை நிச்சயம் முடிந்து போகும். இப்படியாக, சென்னையில் மழையில்லாத நாட்களின் எண்ணிக்கை ஒரு வழியாக முடிவுக்கு வரப் போகிறது.

ஜூன் - ஜூலை மாதங்களில் 20 - 50 மி.மீ. அளவில் பெய்யும் மழையானது நிச்சயம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உதவாது. எனவே, பெய்யும் மழை நீரை சேகரித்துத்தான் இந்த இரண்டு மாத காலத்தை நாம் ஜம்மென்று நகர்த்த முடியும். இதற்காக மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராஜ், மழை நீர் சேகரிப்புக்கான வழிமுறைகளை விளக்கியுள்ளார். யாருக்கெல்லாம் இந்த வசதி இருக்கிறதோ அவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இது மட்டுமல்லாமல் பல்வேறு வழிமுறைகளில் மழை நீரை நாம் சேகரிக்க முடியும். எனவே நவம்பர் மாதம் வரை இப்படியே மழை நீரைச் சேகரித்துத்தான் தண்ணீர் பஞ்சத்தை நம்மால் விரட்ட முடியும். 

மேற்குக் கடற்கரையோர மாவட்டங்களில் மிக விரைவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்க உள்ளது. இந்த மேற்குக் கடற்கரையோர பகுதிகளில் மழை பெய்வது மிகவும் அரிதானது. இந்த மழையால் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com