சாகித்ய அகாதெமி விருதில் தமிழ் இடம்பெற வேண்டும்: குளச்சல் மு. யூசுப் வலியுறுத்தல்

சாகித்ய அகாதெமி நிறுவனம் தனக்கு வழங்கிய விருதில், ஹிந்திக்கு பதிலாக, தமிழில் எழுத்துக்களை பொறித்துத் தரவேண்டும் என எழுத்தாளர் குளச்சல் மு. யூசுப் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாகித்ய அகாதெமி விருதில் தமிழ் இடம்பெற வேண்டும்: குளச்சல் மு. யூசுப் வலியுறுத்தல்


சாகித்ய அகாதெமி நிறுவனம் தனக்கு வழங்கிய விருதில், ஹிந்திக்கு பதிலாக, தமிழில் எழுத்துக்களை பொறித்துத் தரவேண்டும் என எழுத்தாளர் குளச்சல் மு. யூசுப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலை பூர்வீகமாகக் கொண்டவர் மு. யூசுப். தற்போது நாகர்கோவிலில் வசித்துவரும் இவர், மலையாளத்தில் இருந்து பல படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். பள்ளிப் படிப்பையே தாண்டாத யூசுப், தொடக்கத்தில் மளிகை கடை நடத்தினார். அங்கு பொட்டலம் மடிக்க வரும் காகிதங்களின் வாயிலாக மலையாளம் கற்றார்.  மலையாளத்தில் இந்துகோபன் எழுதிய நாவலை திருடன் மணியன்பிள்ளை என்ற தலைப்பில் தமிழுக்கு மொழி பெயர்த்தார் யூசூப். இந்த நாவல் 2018 -ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு பிரிவுக்கான (தமிழ்) சாகித்ய அகாதெமி விருதை குளச்சல் மு. யூசூப்-க்கு பெற்றுத்தந்தது.
இந்நிலையில், சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு, திரிபுரா தலைநகர் அகர்தாலாவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் விருது அறிவிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாதெமி தலைவர் விருதுகளை வழங்கினார். கடந்த 14  -ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவில் குளச்சல் மு. யூசூப்-க்கும் விருது வழங்கப்பட்டது.  விருதைப் பெற்றுக்கொண்ட யூசூப், தனக்கு வழங்கப்பட்ட விருதில், தனக்கு தெரியாத ஹிந்தி எழுத்துக்களை மாற்றி, தமிழில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதை சாகித்ய அகாதெமி  பரிசீலிப்பதாக கூறியுள்ளதாக, குளச்சல் மு. யூசூப் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com