தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பதில் தேட வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து, நீர்நிலைகளை ஆழப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. 

தமிழகத்தில் ரூ.500 கோடி அளவில் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் வரையில் சென்னை மக்களின் தண்ணீர் தேவையை வீராணம் பூர்த்தி செய்யும். இயற்கை கைகொடுக்க முடியாத நிலையில், லாரிகள் மூலம் அரசு தண்ணீரை விநியோகிக்கிறது. 40 சதவிகித மழை பெய்திருக்கிறது. பாதிக்கு மேல் பருவமழை தவறிவிட்டது. ஆனாலும் அரசு சமாளிக்கிறது. 

வீராணம் உள்ளிட்ட திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வரவில்லை என்றால் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கும். எதிர் வரும் காலத்தில் வரும் பருவமழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும். தன்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com