முதலமைச்சர் மாநில இளைஞர் விருது: ஜூலை 2-க்குள்  விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு ஜூலை 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு ஜூலை 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு சார்பில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்கள், 3 பெண்களுக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வழங்கப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் www.sdat.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் ஜூலை 2-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தங்களால் செய்யப்பட்ட சாதனைகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், எண்- 30, கிழக்கு கிளப் சாலை, ஷெனாய் நகர், சென்னை-600030 என்ற முகவரியில் ஜூலை 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com