வருவாயைப் பெருக்குவதில் தமிழக அஞ்சல் துறைக்கு மூன்றாம் இடம்: தமிழக அஞ்சல்துறை முதன்மை தலைவர் தகவல்

வருவாயைப் பெருக்குவதில் இந்திய அளவில் தமிழக அஞ்சல் துறை மூன்றாம் இடம் பிடித்துள்ளது என்று அஞ்சல்துறை தமிழக வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத் தெரிவித்தார்.
தமிழக அஞ்சல்துறையில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு  விருது வழங்குகிறார் சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் அஜித்குமார். 
தமிழக அஞ்சல்துறையில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு  விருது வழங்குகிறார் சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் அஜித்குமார். 


வருவாயைப் பெருக்குவதில் இந்திய அளவில் தமிழக அஞ்சல் துறை மூன்றாம் இடம் பிடித்துள்ளது என்று அஞ்சல்துறை தமிழக வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத் தெரிவித்தார்.
அஞ்சல்துறை சார்பில், சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தாய் ஆகார் எனும் தலைப்பில் சிறந்த கடிதம் எழுதியவர்களுக்கான பரிசு வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அஞ்சல்துறை தமிழக வட்ட முதன்மைத் தலைவர் எம். சம்பத் பேசியது: 
வருவாயைப் பெருக்குவதில் இந்திய அளவில் தமிழக அஞ்சல் துறை  மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது தமிழக அஞ்சல் துறையின் ஒவ்வொரு ஊழியரின் கடின முயற்சியால்தான் முடிந்தது. விரைவில் நாம் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிடுவோம். அதற்காக நாம் அடைய வேண்டிய இலக்கு ரூ.40 கோடி மட்டுமே. 
தமிழக அஞ்சல் துறை 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.1,263 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.  இதுதவிர, அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள்காப்பீடு-இருந்து ரூ.1153 கோடி பிரீமியம் தொகை கிடைத்துள்ளது. காப்பீடு திட்டம் மூலமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம்  முதலிடத்தில் இருக்கிறது என்றார் அவர்.
 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருது வழங்கி, சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் அஜித்குமார் பேசியது: அஞ்சல்துறை எல்லா மக்களின் வாழ்விலும் கலந்து உள்ளது. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அஞ்சல் துறை சிறந்த சேவை ஆற்றி வருகிறது. வங்கி, சேமிப்புகணக்கு, காப்பீடு, பணப் பரிவர்த்தனை, ஆதார், பாஸ்போர்ட் சேவைகள், மின்கட்ட வசூல் போன்ற பல்வேறு சேவைகளை அஞ்சல் துறை வழங்கி வருகிறது. 
இதன்மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதுதவிர, அஞ்சல் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது.  அஞ்சலகங்களை நவீனமயமாக்குவதில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பென்சிலால் வரையப்பட்ட மகாத்மா ஓவியம் கொண்ட சிறப்பு அஞ்சல் உறை, புகழ்பெற்ற பாடகர்களின் உருவம் கொண்ட அஞ்சல் தலைகளின் தொகுப்பு ஆகியவற்றை சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் அஜித்குமார் வெளியிட்டார். சிறந்த சேவையாற்றிய 63 ஊழியர்கள்,  போட்டியில் வெற்றி பெற்ற 18 பேருக்கு விருது, சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com