வீராணம் ஏரியில் வேகமாகக் குறையும் நீர்மட்டம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர்
நீர்மட்டம் குறைந்துவரும் வீராணம் ஏரி.
நீர்மட்டம் குறைந்துவரும் வீராணம் ஏரி.


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
காவிரியின் ஒரு பிரிவான கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கு தண்ணீர் வருகிறது. அங்கு தேக்கப்படும் நீர், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இதன்மூலம் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் வேளாண் பாசனமும், சென்னைக்கு குடிநீரும் அனுப்பப்பட்டு வருகிறது. 
2019- ஆம் ஆண்டு, ஏப்ரல் 7-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதி வரை வடவாறு வழியாக ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால், ஏரியின் முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. அதாவது, 1,465 மில்லியன் கன அடி நீர் தேக்கப்பட்டு, சென்னைக்கு மட்டும் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏரி வறண்ட நிலையில், நிகழாண்டு தொடர்ந்து ஏரிக்குத் தண்ணீர் வந்ததால், வற்றாமல் இருந்தது. தற்போது, கடும் வெப்பம் காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. 
தற்போது, ஏரியிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. சென்னைக்கு மட்டுமே நாள்தோறும் வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, ஏரியின் நீர்மட்டம் 43.06 அடியாக, சுமார் 516 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
தொடர்ந்து, மழையின்றி கடும் வெப்பம் நிலவுமானால் இன்னும் 20 நாள்களுக்கு மட்டுமே ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீரை அனுப்ப முடியும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com