Enable Javscript for better performance
கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு ஒரு மாதம் அவகாசம்- Dinamani

சுடச்சுட

    

    கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் 

    By DIN  |   Published on : 21st June 2019 12:59 PM  |   அ+அ அ-   |    |  

    High-court-of-madurai

    நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆன்லைனில் வெளியிட தமிழக அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

    கடந்த 2017-2018 -ஆம் ஆண்டுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை, தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்தது. ஆனால், 2018-2021 -ஆம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை, இதுவரை அக்குழு நிர்ணயம் செய்யவில்லை. இதனால், தமிழகத்தில் இயங்கி வரும் 7,600 தனியார் பள்ளிகளில் பல பள்ளிகள் 2018-2019 -ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிகமாக வசூலித்து வருகின்றன.எனவே, 2018-2021-ஆம் ஆண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை வெளியிடுமாறு, தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை ஏற்கெனவே விசாரணை செய்த உயர் நீதிமன்றம், கல்விக் கட்டண குழு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை, ஆன்-லைன் மற்றும் செய்தித் தாள்களில் வெளியிட உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஹக்கிம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் கல்விக் கட்டணம் வெளியிடுவது குறித்து கால அவகாசம் கோரப்பட்டது. அதனடிப்படையில், நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆன்லைனில் வெளியிட தமிழக அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசு 3 மாதம் அவகாசம் கேட்ட நிலையில் ஒரு மாதம் மட்டும் நீதிமன்றம் அவகாசம் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp