Enable Javscript for better performance
குடிநீர்ப் பிரச்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர்ப் பிரச்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    By DIN  |   Published on : 21st June 2019 12:42 PM  |   அ+அ அ-   |    |  

    eps1

    தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். 

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டமானது திடீரென தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக புதன், வியாழக்கிழமைகளில் முதல்வர் பழனிசாமி ஓய்வு எடுத்து வந்தார். 

    இந்நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். 

    தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம், ஏரி குளங்களை தூர் வாரும் பணியை தீவிரப்படுத்துவது, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp