Enable Javscript for better performance
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    By DIN  |   Published on : 21st June 2019 12:57 PM  |   அ+அ அ-   |    |  

    rainclouds


    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில் கடந்த 8ம் தேதி கேரள மற்றும் தென் தமிழகத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை வாயு புயல் காரணமாக வடக்கு நோக்கி நகர்ந்தது. இதனால் பருவ மழை தீவிரமடைவது சற்று தாமதமானது.

    தற்போது தென் மேற்கு பருவ மழை, கேரளா, தமிழகத்தின் சில பகுதிகள், ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் நகர்ந்து வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கேரள கடற்கரை, ஆந்திர பகுதிகள், தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை பெய்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    தற்பொழுது வளிமண்டலத்தின் மேல் அடுக்கில், மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்துவரும் 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் பெய்திருக்கும் மழையின் அளவு 24.8 மி.மீ.. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 33.6 மி.மீ. ஆகும். இதன் மூலம் இந்த மாதத்தில் பெய்த மழை 37 சதவீதம் குறைவு.

    தென்மேற்குப் பருவ மழை கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுப்பெறும் போது நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்குப் பருவமழை தடைப்பட்டிருந்த நிலையில் மேகக் கூட்டங்கள் குறைவாக இருந்தது. இதனால் தமிழகத்தில் அனல் காற்று வீசியது. தற்போது தென்மேற்குப் பருவ மழை நகர்ந்து வரும் நிலையில் வெப்பம் படிப்படியாகக் குறையும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp