வங்கியில் கடன் பாக்கி: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்துக்கு வருகிறது

வங்கியில் வைத்திருக்கும் கடன் பாக்கிக்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் பொறியியல் கல்லூரி ஏலத்துக்கு வருகிறது.
வங்கியில் கடன் பாக்கி: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்துக்கு வருகிறது


சென்னை: வங்கியில் வைத்திருக்கும் கடன் பாக்கிக்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் பொறியியல் கல்லூரி ஏலத்துக்கு வருகிறது.

விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி உள்ளிட்ட சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று நாளிதழில் வெளியிட்டுள்ளது.

நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் ஏல அறிவிப்பில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வைத்திருக்கும் ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக சென்னை சாலிகிராமத்தில் 4,651 சதுர அடி பரப்பளவில் உள்ள விஜயகாந்தின் வீடும், மதுராந்தகம், மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஜூலை 26ம் தேதி ஏலத்துக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜயகாந்த் வாங்கிய கடனுக்கான பாக்கி ரூ.5,52,73,825 ஆக உள்ளது. இதற்காக ஆண்டாள் அழகர் எஜிகேஷனல் டிரஸ்ட் பெயரில் உள்ள கல்லூரி ஏலத்துக்கு விடப்படுகிறது. இதன் குறைந்தபட்ச கேட்பு விலை ரூ.92,05,05,051  ஆகி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாலிக்கிராமத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டுக்கான குறைந்தபட்ச கேட்பு விலை ரூ.4,25,84,849 ஆகவும், சாலிக்கிராமத்தில் உள்ள காலி வீட்டு மனைக்கான குறைந்தபட்ச கேட்பு விலை ரூ.3,04,34,344 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com