சுடச்சுட

  

  கல்விக் கட்டணத்தை ஆன்லைனில் வெளியிட ஒரு மாதம் கால அவகாசம்: உயர்நீதிமன்றம்

  By DIN  |   Published on : 22nd June 2019 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  High-court-of-madurai


  பள்ளிகளின் 2018-2021  -ஆம் ஆண்டுக்கான  நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை ஆன்லைனில் வெளியிட அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
  மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் தாக்கல் செய்த மனு: 2017-2018-ஆம் ஆண்டிற்கான, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை, தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்தது. இதையடுத்து 2018-2021-ஆம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை இதுவரை தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்யவில்லை. 
  இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் 7,600 தனியார் பள்ளிகளில் பல பள்ளிகள் அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றன.
  எனவே,  2018-2021-ஆம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை இணையதளத்திலும், நாளிதழ்களிலும் வெளியிடுமாறு தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
  இந்த வழக்கு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட  அமர்வில்  வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
  அப்போது அரசு தரப்பில் 2018-21- ஆம் ஆண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட  கல்விக் கட்டண விவரத்தை  வெளியிட 3 மாத கால அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 1 மாத கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai