சுடச்சுட

  

  ஜூலை 8 முதல் 15 வரை அரசுப் பள்ளி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு

  By DIN  |   Published on : 22nd June 2019 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
  ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  
   பணி மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்கள், விண்ணப்பங்களை ஜூன் 28-ஆம் தேதிக்குள் கொடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 8-ஆம் தேதி வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. 
  இதைத் தொடர்ந்து ஜூலை 9 முதல் 15 வரை தொடக்கப் பள்ளி, நடுநிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.  இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.  
  முன்னதாக இந்தக் கலந்தாய்வு ஜூன் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai