
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு ஆணை 28-ஆம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேருவதற்கு கடந்த 10-ஆம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 24-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
அதற்கு பிறகு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கான சேர்க்கை ஆணைகள் ஜூன் 28-ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஆணையின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.