கிராம ஊராட்சிகளில் பெண்களுக்கு 53% இடஒதுக்கீடு: அரசுத் துறை தகவல்

உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் கிராம ஊராட்சிகளில் அதிகளவாக பெண்களுக்கு 53 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கிராம ஊராட்சிகளில் பெண்களுக்கு 53% இடஒதுக்கீடு: அரசுத் துறை தகவல்

உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் கிராம ஊராட்சிகளில் அதிகளவாக பெண்களுக்கு 53 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வார்டு உறுப்பினர் பதவியிடங்களைப் பொருத்தவரையில் கிராம ஊராட்சிகளில்தான் அதிகளவாக பெண்களுக்கு 53 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தலைவர் பதவி இடங்களைப் பொருத்தவரையில் மாவட்ட ஊராட்சிகளில் அதிகபட்சமாக 52 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என ஊரக வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகள், வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்கான சட்டத் திருத்தங்கள் கடந்த 2016}ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.
எத்தனை மேயர் பதவிகள் : தமிழகத்தில் கடந்த 2016}ஆம் ஆண்டு வரையில் 12 மாநகராட்சிகள் இருந்தன. அவற்றில் மேயர் பதவிகள் பொதுப் பிரிவுக்கு 5 ஆகவும், பெண்களுக்கு 5 ஆகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு இடமும், தாழ்த்தப்பட்ட பிரிவினரில் பெண்களுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மூன்று மாநகராட்சிகள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழக அரசுத் துறை அதிகாரிகள் கூறியது:
2016}ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட இடஒதுக்கீடு முறைகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதன்படி, 12 மாநகராட்சிகளிலும் 1,016 வார்டுகள் உள்ளன. அவற்றில் 519 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, 124 நகராட்சிகளைப் பொருத்தவரை, 3 ஆயிரத்து 516 வார்டுகள் உள்ளன. அவற்றில் பெண்களுக்கு 1,792 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 124 தலைவர் பதவியிடங்களில் 62 பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பேரூராட்சிகளைப் பொருத்தவரையில், 8 ஆயிரத்து 288 வார்டுகளில், பெண்களுக்கு 4 ஆயிரத்து 325 வார்டுகளும், தலைவர் பதவிக்கு 528 மொத்த இடங்களில் 264 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்கள் சதவீதம் எவ்வளவு: மாவட்ட ஊராட்சிகளில் மொத்தமுள்ள 655 வார்டுகளில், 335 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது 51சதவீதமாகும். ஊராட்சி ஒன்றியங்களில் 3 ஆயிரத்து 337 வார்டுகளும் (52 சதவீதம்), கிராம ஊராட்சிகளில் 52 ஆயிரத்து 726 வார்டுகளும் (53 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளன.
தலைவர் பதவியிடங்களைப் பொருத்த வரையில், மாவட்ட ஊராட்சிகளில் 16 இடங்களும் (52 சதவீதம்), ஊராட்சி ஒன்றியங்களில் 194 இடங்களும் (50 சதவீதம்), கிராம ஊராட்சிகளில் 6 ஆயிரத்து 262 (50 சதவீதம்) இடங்களும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வார்டுகளைப் பொருத்தவரையில் கிராம ஊராட்சிகளிலும், தலைவர் பதவியிடங்களில் மாவட்ட ஊராட்சிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதத்தைத் தாண்டி அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com