
பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான அனைத்து மின்சார ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிக்காக ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (இன்று) 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்துசெய்யப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.