தமிழகத்தில் ரூ.211 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் ரூ.211 கோடியில் 42 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலமாக புதிய
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 42  துணை மின் நிலையங்களை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர்கள், அதிகாரிகள்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 42 துணை மின் நிலையங்களை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர்கள், அதிகாரிகள்.

தமிழகத்தில் ரூ.211 கோடியில் 42 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலமாக புதிய மின் நிலையங்களை அவர் திறந்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின் பராமரிப்புச் செலவுகளையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படும் உச்சகட்ட மின்தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரத்தை மக்களுக்கு அளித்திட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும்.
இதைக் கருத்தில் கொண்டு புதிய, தரம் உயர்த்தப்பட்ட துணை மின்நிலையங்களை தமிழக அரசு அமைத்து வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் அத்தாணியில் துணை மின்நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி, திருவள்ளூர் ஏலியம்பேடு துணை மின்நிலையங்கள், ஈரோடு மாவட்டம் கங்காபுரம், கரூர் மாவட்டம் நொய்யல், தஞ்சாவூர் திருப்புறம்பியம், திருநெல்வேலி மாவட்டம் கரிசல்பட்டி, கரூர் மாவட்டம் புலியூர், கடலூர் கீழக்குப்பம், கோ.பூவனூர் ஆகிய ஐந்து இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, தருமபுரி கீரைப்பட்டி, ராமகொண்டஅள்ளி, மாவேரிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் நீரடி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, உப்பிடமங்கலம், கிருஷ்ணகிரி முதுகுறுக்கி, இருதுக்கோட்டை, எக்கூர், பூனப்பள்ளி, மத்திகிரி, புதுக்கோட்டை குளத்தூர் நாயக்கன்பட்டி, மங்களாகோயில், சேலம் மாவட்டம் சத்யாநகர், தஞ்சாவூர் சுவாமிமலை, திருவள்ளூர் மிட்டனமள்ளி, சின்னம்பேடு, காரம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் அப்பேடு, ஒண்ணுபுரம், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி, திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி, திருச்சி விடத்திலாம்பட்டி, தூத்துக்குடி ஆத்தூர், வேலூர் மொரசப்பள்ளி, கீரைசாத்து, கரிக்கல், பள்ளிகொண்டா, உதயேந்திரம், உப்பரப்பள்ளி, மோடிகுப்பம், விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம், எஸ்.கொடிக்குளம் ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி. கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 42  துணை மின் நிலையங்களை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர்கள், அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com