நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். 
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்  பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அத்துறையின் செயலாளர் (பொறுப்பு)  எஸ்.கே.பிரபாகர்.  
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்  பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அத்துறையின் செயலாளர் (பொறுப்பு)  எஸ்.கே.பிரபாகர்.  

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். 
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் உதவிப் பொறியாளர் நிலையில் இருந்து தலைமைப் பொறியாளர் வரையிலுள்ள 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28-இல் தொடங்குகிறது. துறை வாரியாக மானிய கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களில் முதல்வரும், அந்தத் துறையின் அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட உள்ளார். இதற்கு முன்னதாக, துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள், பேரவையில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 
முதல்வர் பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை (பொறுப்பு) செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், துணைப் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொதுப்பணித் துறை: நெடுஞ்சாலைத் துறையைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 26-இல் நடைபெறும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்திலும் தமிழகம் முழுவதிலும் இருந்து அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com