குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க அரசு தயாராக இல்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

குடிநீருக்காக மக்கள் படும் கஷ்டப்படுவதை அறிந்தும், குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க அதிமுக அரசு தயாராக இல்லை என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினார்.
குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க அரசு தயாராக இல்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

குடிநீருக்காக மக்கள் படும் கஷ்டப்படுவதை அறிந்தும், குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க அதிமுக அரசு தயாராக இல்லை என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினார்.
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், கனிமொழி எம்.பி. பேசியது: குடிநீர்ப் பிரச்னையை திமுக அரசியலாக்குகிறது என ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். தமிழகத்தில் திரும்பிய திசையெங்கும் குடிநீர் பிரச்னை உள்ளது. ஆனால், முதல்வரும், அமைச்சர்களும்
தமிழகத்தில் குடிநீர் பிரச்னையே  இல்லை எனக் கூறுகின்றனர்.  
குடிநீருக்காக மக்கள் நீண்ட வரிசையில் குடங்களுடன் நிற்பது  ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லையென்றால், அதனை அரசுக்கு உணர்த்தவே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 20 லட்சம் லிட்டர் குடிநீர் தருவதற்கு கேரள அரசு முன்வந்தது. ஆனால், தமிழக அரசு அதை ஏற்கவில்லை. 
கேரள மாநிலத்தை ஆளுவது கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் எனக் கருதி தண்ணீர் வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கலாம். மத்தியில் ஆளும் அரசுக்கு அஞ்சும் தமிழக அரசு மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தயாராக இல்லை.  கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக தமிழகத்தை ஆண்டு வருகிறது. திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தவில்லை. 
எந்தக் கிராமத்துக்கு சென்றாலும், அங்குள்ள மக்கள் தங்களது பகுதியிலுள்ள நீர் நிலைகளை மராமத்து செய்ய வேண்டும்;  நீர் வழித் தடங்களை தூர் வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். குடிநீர் பிரச்னையில் அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடித்தால் மிகப்பெரிய போராட்டத்தை திமுக நடத்தும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com