சுடச்சுட

  
  engineering


  2019-20-ஆம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
  தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இந்த கலந்தாய்வைப் பொருத்தவரை, முதல் மூன்று நாள்கள் நடைபெறும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு மற்றும் பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இரண்டும் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரடி கலந்தாய்வு முறையில் நடத்தப்படும்.
  அதன் பின்னர் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் நடத்தப்படும். இந்த ஆன்-லைன் கலந்தாய்வில் மாணவர்கள், அவர்களின் வீட்டில் இருந்தபடியே பங்கேற்க முடியும்.
  இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் முதல் நாள் கலந்தாய்வு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இரண்டு பிரிவுகளாக காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை 80 பேருக்கும், மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மீதமுள்ள 58 பேருக்கும் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
  இரண்டாம் நாளான புதன்கிழமை முன்னாள்  ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 7 பிரிவுகளாக சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
  மூன்றாம் நாளில் 8 பிரிவுகளாக விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 26 முதல் 28 வரை சேர்க்கை நடக்கவுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai