சுடச்சுட

  

  சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூர் சென்றிருக்கலாம்: ஸ்டாலினை கிண்டல் செய்த தமிழிசை 

  By DIN  |   Published on : 25th June 2019 03:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamilisai

   

  சென்னை: சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூர் சென்றிருக்கலாம் என்று குடிநீர் போராட்டம் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக மாநிலத் தலைவர்  தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.

  இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்... தற்போது தான் மட்டும் சிங்கப்பூர்  சென்றுவிட்டு வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்.

  சிங்கப்பூர் சென்றதிற்கு பதிலாக பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை  கட்ட வேண்டாம்  என்று கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம்.

  மக்களின் தாகத்தை அரசியலாக்கி  தங்களின் பதவி தாகத்துக்கு   போராடுவதா? இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்..

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai