இன்று மீண்டும் ஒரு நைட்ஷோ காத்திருக்கிறதாம் சென்னைவாசிகளே! செம மழைதான்!!

நேற்றைப் போல இன்றும் சென்னையில் மீண்டும் ஒரு நைட்ஷோ காத்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இன்று மீண்டும் ஒரு நைட்ஷோ காத்திருக்கிறதாம் சென்னைவாசிகளே! செம மழைதான்!!


சென்னை: நேற்றைப் போல இன்றும் சென்னையில் மீண்டும் ஒரு நைட்ஷோ காத்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று பரவலாக இல்லை என்றாலும் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தூறல் முதல் லேசான மழை வரை நேற்று இரவு சென்னைவாசிகளை தூங்க விடாமல் செய்தது இந்த மழை. ஏன் தூங்க விடாமல் செய்தது என்று கேட்காதீர்கள். சில இடங்களில் மின்சாரம் தடைபட்டதுதான் காரணமாம்.

சரி. நேராக விஷயத்துக்கு வரலாம், இன்று எப்போது எங்கே மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் சொல்லியிருக்கிறார் என்று சும்மா சரவெடி போல சொல்லிவிடுங்கள் என்கிறீர்களா?

சொல்லிவிட்டால் போகிறது.

அதாவது, சென்னையில் இன்று இரவும் ஒரு இரவுக் காட்சி காத்திருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் ஒரு பிரகாசமான நாளாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது. 

அதோடு, வடமாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு சிறப்பாகவே உள்ளது.

இன்று ஒரு சாதாரண வெப்பம் நிறைந்த நாள்தான். ஆனால் அது பற்றி கவலைப்பட வேண்டாம், தமிழகத்தின் உள்பகுதி தெளிவாக இருக்கிறது. அங்கு மேகக் கூட்டங்கள் உருவாகி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை நோக்கி நகரும். இன்று இரவும் மழை இரவாக அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது இந்தமுறை வளிமண்டலத்தில் உள்ள மேலடுக்கு சுழற்சியானது நடுமத்தியில் இருப்பதால், கருமேகங்கள் அதிக மழையை உள்வாங்கிக் கொண்டு நாளை காலை வரை நீடித்து இருக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

ஜூன் 20ம் தேதி முதலே (ஜூன் 21ம் தேதி தவிர) காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் அன்றாடம் இங்கொன்றும் அங்கொன்றுமாக மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. 4 நாட்களாக மழை பெய்கிறது. ஒரு நாள் தென் சென்னை, நேற்று மேற்கு சென்னைப் பகுதிகளில் மழை பெய்தது. ஆனால் இன்று சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. துரதிருஷ்டம் கொண்ட பகுதிகளான அண்ணாநகர், நுங்கம்பாக்கம் போன்றவை கடந்த நாட்களில் மழையை பார்க்கவேயில்லை. இந்த பகுதிகளும் இன்று மழையை நேருக்கு நேர் சந்திக்கும் என்று நம்பலாம்.

இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடக்கு தமிழகத்துக்கு அருகே இருந்தது. ஒரு வேளை நாளை மேக மூட்டமான நாளாகக் கூட அமையலாம். சில நேரங்களில் லேசான தூறல் போட்டு, காலையில் மழை பெய்யும் ஒரு நாளாகவும் சில இடங்களில் அமைய வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com