24 மணி நேரத்தில் ரூ.1 கோடி செலவு: இதுதான் உங்க கிராம தரிசனமா குமாரசாமி?

அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிராம தரிசனம் நிகழ்ச்சியை (மக்கள் குறைதீர் முகாம்)முதல்வர் குமாரசாமி கடந்த வாரம் தொடங்கினார். இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக
24 மணி நேரத்தில் ரூ.1 கோடி செலவு: இதுதான் உங்க கிராம தரிசனமா குமாரசாமி?


அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிராம தரிசனம் நிகழ்ச்சியை (மக்கள் குறைதீர் முகாம்)முதல்வர் குமாரசாமி கடந்த வாரம் தொடங்கினார். இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

அரசுப் போக்குவரத்து பேருந்திலேயே குமாரசாமி சண்டரகி கிராமத்து வந்தார். அரசுப் பள்ளியில்தான் தங்கியிருந்தார். பாயில்தான் படுத்தார். ஆனாலும், கிராம தரிசனத்துக்கு ஆன செலவு ரூ.1 கோடி என்று பில் போட்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவும் குமாரசாமிக்காக செலவிடப்பட்ட தொகையில்லையாம், அவரைப் பார்க்க வந்த பொதுமக்களின் வசதிக்காக செலவு செய்யப்பட்டதாம்.

அதாவது ரூ.25 லட்சம் அளவுக்கு, யாத்கிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தர்கி பகுதிக்கு வந்த பொதுமக்களின் வசதிக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாம்.

மேலும் ஒரு ரூ.25 லட்சம், பொதுமக்களுக்கான தற்காலிக அலுவலகம் அமைக்கவும், மனுக்களைப் பெற மையங்கள் அமைக்கவும் செலவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 25 ஆயிரம் பேருக்கு சமையல் செய்து வழங்க என்னவோ ரூ.15 ஆயிரம்தான் செலவாகியுள்ளது. ஆனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகளுக்கு இரவு உணவு, காலை உணவு போன்றவற்றுக்கு மட்டும் ரூ.25 லட்சம் செலவாகியுள்ளது.

மேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.50 லட்சம் செலவானதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் குமாரசாமி, தன்னுடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் என ஒரு பெரிய படையோடு கிராமத்துக்குத் சென்றார். நேரடியாக சுமார் 4000 பேரை சந்தித்து மனுக்களைப் பெற்றார்.

கிராம தரிசனம் நிகழ்ச்சி குறித்து தெரிவிக்கும் போது குமாரசாமி தரப்பில் தனக்காக எந்த பெரிய வசதிகளும் கிராமத்தில் செய்யப்படாது என்று கூறினார். ஆனால் நடந்தது வேறாக உள்ளது என்பதே உண்மை.

2006-ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த போது செயல்படுத்தப்பட்டு, மக்களின் பாராட்டை பெற்றிருந்த கிராம தரிசனம் நிகழ்ச்சியை 13 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் குமாரசாமி மீண்டும் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை இரவு 7.20மணிக்கு கர்நாடக விரைவு ரயிலில் புறப்பட்ட முதல்வர் குமாரசாமி, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30மணிக்கு யாதகிரி வந்தடைந்தார். 

குர்மிட்கல் நகரத்தில் நடந்த வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டபிறகு, யாதகிரி மாவட்டம், குர்மிட்கல் வட்டத்தில் உள்ள சண்டரகி கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 12.40மணிக்கு சென்றார். அங்கு குறைதீர்முகாமை நடத்துவதற்கு அரசு ஆரம்பப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. முதல்வர் குமாரசாமியை கிராமமக்கள் ஆரத்தி எடுத்தும், நெற்றியில் திலகமிட்டும் வரவேற்றுக் கொண்டாடினர். 

ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்தபடி மக்களின் குறைகளைக் கேட்டு, அது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி வழிகாட்டுதல் வழினார். 

மாதந்தோறும் வெவ்வேறுகிராமங்களில் கிராம தரிசனம் நிகழ்ச்சியை நடத்துவேன். யாதகிரி அரசு மருத்துவமனையின் படுக்கை எண்ணிக்கையை 100-இல் இருந்து 300ஆக உயர்த்தப்படும். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவு தொடங்கப்படும் என்றார்.
கிராம தரிசனம் நிகழ்ச்சிக்கு பிறகு சண்டரகி கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் முதல்வர் குமாரசாமி இரவு தங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com