ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை 5-ஆவது முறையாக மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு 

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை 5-ஆவது முறையாக மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பர் 25 -ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் கடந்த நவம்பர் 22 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையைத் தொடங்கினார்.

முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் கடந்த 2017 டிசம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, அதாவது 2018  ஜூன் 24  வரை ஆணையத்தின் காலத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது.

கடந்த 2018  ஜூன் 25 -ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 24-ஆம் தேதி வரை ஆணையத்தின் காலம் இரண்டாம் முறை 4 மாதங்களுக்கும், இதையடுத்து, மூன்றாம் முறையாக கடந்த அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து 2019 பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ  மருத்துவர்கள் உள்ளிட்ட பலரிடம் ஆணையமும்,  சசிகலா தரப்பு வழக்குரைஞர்களும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் ஆணையத்தின் காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. ஆணையத்தின் இந்தக் கோரிக்கையை ஏற்று,  பிப்ரவரி 24-ஆம் தேதியில் இருந்து 4 மாதங்கள் அதாவது வரும் ஜூன் 24-ஆம் தேதி வரை ஆணையத்தின் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலத்தை 5-ஆவது முறையாக மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com