பயன்படுத்தப்படாமல் இருந்த காலா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து

சென்னை அருகே படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது..
பயன்படுத்தப்படாமல் இருந்த காலா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து

சென்னை: ரஜினிகாந்த் நடித்த காலா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை அருகே நாசரேத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரில், நடிகா் ரஜினிகாந்த் நடித்த காலா படத்துக்கு, சுமாா் அரை ஏக்கர் பரப்பளவில் மும்பையின் குடிசைப் பகுதி போன்ற படப்பிடிப்புத் தளம் அமைக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து படமும் வெளியாகி வெற்றிபெற்றது.

படப்பிடிப்புக்குப் பிறகு அந்த குடிசைப் பகுதி தளம் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவா்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து அவா்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீவிபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com