சுடச்சுட

  

  குன்னூர் அருகே முகாமிட்டுள்ள யானைகள்: அச்சத்தில் தேயிலை விவசாயிகள்

  By DIN  |   Published on : 26th June 2019 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  elephant

  டெரேமியா பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்.


  நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம், டெரேமியா  பகுதியில் குட்டியுடன் கூடிய  5 யானைகள் செவ்வாய்க்கிழமை முகாமிட்டிருந்ததால் இப்பகுதி மக்கள், தேயிலை விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் .
  தூதூர்மட்டம், டெரேமியா, கொலக்கம்பை ஆகிய கிராமங்களின் அருகே உள்ள வனப் பகுதிகளில் பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்டத்  தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
  கடந்த சில நாள்களாக இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் கூடிய யானைகள் உலவுகின்றன. இதனால் தேயிலைத் தோட்டத்தில் பணிக்குச் செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான தேயிலை தோட்டங்கள்  வெறிச்சோடிக் காணப்படுகின்றன. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னதாக, காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai