சுடச்சுட

  

  சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 02:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eps

  சபாநாயகர் தனபாலை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். 

  தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28-இல் தொடங்கி, ஜூலை 30-ஆம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 23 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடக்க உள்ளது.

  இந்நிலையில் சபாநாயகர் தனபாலை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் மீது திமுக தரப்பில் தரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக இருவரும் ஆலோசித்தாக தகவல் வெளியாகி உள்ளது. 

  சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் பேரவையில் ஜூலை 1ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai