சுடச்சுட

  

  தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார் காலமானார் 

  By DIN  |   Published on : 26th June 2019 02:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kasthuri

  த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனின் தாயார், கஸ்தூரி மூப்பனார் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். 

  அவருக்கு வயது 88 ஆகும். கஸ்தூரி மூப்பனாரின் இறுதிச் சடங்குகள் நாளை கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் பகுதியில் நடைபெறுவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கஸ்தூரி மூப்பனார் உடலுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

  இதனிடையே ஜி.கே. வாசனின் தாயார் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai