சுடச்சுட

  

  துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை தமிழக அரசு மூடியது: ஸ்டெர்லைட்

  By DIN  |   Published on : 26th June 2019 04:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sterlite


  சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை தமிழக அரசு மூடியது என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று ஆலை நிர்வாகம் விளக்க மனு தாக்கல் செய்தது.

  அந்த விளக்க மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை என NEERI எனப்படும் தேசிய சுற்றுச்சூழல், பொறியியல் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. எனவே தங்களது ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உண்மையாகிறது.

  ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரை சமாதானப்படுத்தவே ஆலையை அரசு மூடியது. 

  கொள்கை முடிவு எடுத்து, ஆலையை மூடியதாக அரசு கூறுகிறது. ஆனால், கொள்கை முடிவு எடுக்க எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரமும்இல்லாமல் கொள்கை முடிவு என்று கூறி ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று, தண்ணீர், நிலம் மாசுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஸ்டெர்லைட் கூறியுள்ளது.

  மேலும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து மீண்டும் இயக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai