சுடச்சுட

  
  kaala_offl1


  சென்னை அருகே, நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்துக்கு அமைக்கப்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் திரைப்பட நகரத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான காலா  திரைப்படத்துக்காக சுமார் அரை ஏக்கரில்  மும்பையின் குடிசைப் பகுதி போன்ற படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டது. அந்த படப்பிடிப்புத் தளம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
  இந்நிலையில்,  இந்தப் படப்பிடிப்புத் தளத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. இதைப் பார்த்த அங்கிருந்த திரைப்பட ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து,அவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
  இந்த தீ விபத்தில் அந்த படப்பிடிப்புத் தளத்தின் முக்கியமான பகுதி எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. அருகே இருந்த குப்பைக் கிடங்கியில் பிடித்த தீ  படப்பிடிப்புத் தளத்துக்குப் பரவியதால் இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai