சுடச்சுட

  

  சென்னையில் ட்ரை வாஷ் முறைக்கு மாறும் ராயல் என்ஃபீல்ட்: எவ்வளவு தண்ணீர் மிச்சமாகும்?

  By PTI  |   Published on : 26th June 2019 04:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  royal


  சென்னை: புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், சென்னையில் உள்ள அனைத்து சர்வீஸ் மையங்களிலும் இன்று முதல் ட்ரை வாஷ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

  சென்னையில் உள்ள அனைத்து சர்வீஸ் மையங்களிலும், சர்வீஸுக்கு வரும் வாகனங்களை தண்ணீர் இல்லாமல் (மிகக் குறைந்த தண்ணீரில்) ட்ரை வாஷ் முறையில் சுத்தப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியிருப்பதால் சுமார் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் மிச்சமாகுமாம் ஒவ்வொரு மாதமும். 

  பல காலமாக இது தொடர்பாக சோதனை செய்து, மிக முக்கியமான ஒரு விஷயத்தை செயல்படுத்தியிருப்பதாகவும், அதே சமயம், வாடிக்கையாளர்களின் திருப்தியில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால், முதல் முறையாக சென்னையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai