உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 25% அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு உயர் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக பிராந்திய இயக்குநர் டாரா கவானா. உடன்  சென்னைக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் (பொறுப்பு) மைக்கேல் கோஸ்டா,
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக பிராந்திய இயக்குநர் டாரா கவானா. உடன்  சென்னைக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் (பொறுப்பு) மைக்கேல் கோஸ்டா,


இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு உயர் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக பிராந்திய இயக்குநர் டாரா கவானா தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியே சட்டவிரோதமாக ஊடுருவும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான புதிய விழிப்புணர்வு பிரசார அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டவிரோத குடியேற்றத்துக்கு அறவே வாய்ப்பில்லை (ஜீரோ சான்ஸ்) என்ற மையக் கருத்தில் அந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதனை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளர்களிடம் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக பிராந்திய இயக்குநர் டாரா கவானா கூறியதாவது:
கடல் வழியே ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகக் குடியேறலாம் என்று சிலர் பரப்பும் பொய் பிரசாரத்தால் அப்பாவி மக்கள் பலர் ஏமாறுகின்றனர். அவ்வாறு ஆஸ்திரேலிய எல்லைக்குள் ஊடுருவ எள்ளளவும் வாய்ப்பில்லை.
கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை கடல் எல்லையைத் தாண்டி வந்த 847 பேரை அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளோம். இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மேற்கொள்ள உள்ளோம். சட்ட விதிகளுக்குள்பட்டு குடியேறுவதில் எந்த சிக்கலும் இல்லை. அவ்வாறு இதுவரை பல்வேறு நாடுகளில் இருந்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர்.
 இந்தியாவில் இருந்து 90 ஆயிரம் மாணவர்கள் உயர் கல்விக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மதிப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக எந்த வன்முறைச் சம்பவங்களும் நிகழவில்லை என்றார் அவர்.
இந்தச் சந்திப்பின்போது சென்னைக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் (பொறுப்பு) மைக்கேல் கோஸ்டா, அந்நாட்டு காவல் கண்காணிப்பாளர் முர்ரே டெய்லர், எல்லை பாதுகாப்பு கண்காணிப்பாளர் டிம் ஷெப்பர்டு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com