தங்கம் விலை: மீண்டும் புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை புதிய  உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ. 26,424-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
தங்கம் விலை: மீண்டும் புதிய உச்சம்


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை புதிய  உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ. 26,424-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
 பவுன் விலை ரூ.27 ஆயிரத்தையும் தாண்டும்  என்று தங்கம்  மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  
பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த  மாதத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து வந்தது. 
ஜூன் 1-ஆம் தேதி ஒரு பவுன் ரூ.24,632 ஆகவும், ஜூன் 19-இல் பவுன்  ரூ.25,176 ஆகவும் இருந்தது. அதன்பிறகு, விலை அதிரடியாக உயரத் தொடங்கியது. கடந்த  சனிக்கிழமை ஒரு பவுன்  ரூ.26 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ. 26,424-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு  கிராமுக்கு ரூ.38 உயர்ந்து, ரூ.3,303-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
இந்த விலை உயர்வுக்கு  காரணம் என்ன என்பது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியது: 
செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு கிராம் ரூ.3,308 ஆகவும், ஒரு பவுன் ரூ.26,464 ஆகவும் இருந்தது. மாலையில் ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ.3,303 - ஆக இருந்தது. திங்கள்கிழமையை விட செவ்வாய்க்கிழமை விலை அதிகரித்து புதியஉச்சத்தை தொட்டுள்ளது. 
அமெரிக்காவில் பெடரல் கூட்டமைப்பு, வைப்பு நிதி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, வைப்பு நிதியில் முதலீடு செய்தவர்கள் தற்போது  தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.  அமெரிக்க, சீன இடையே வர்த்தக போர் நீடிக்கிறது. சீன பொருள்களுக்கு அமெரிக்காவிலும், அமெரிக்கா பொருள்களுக்கு சீனாவிலும் அபரிமிதமான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனால், தொழில்துறை சார்ந்த பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் இப்போது தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர். இதுதவிர,  அமெரிக்க-ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த மூன்று காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் தாக்கமே உள்நாட்டில் காணப்படுகிறது. ஒரு மாதத்தில்  ரூ.27 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
தங்கம் விலை உயர்ந்து வந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி அதே விலையில் தொடர்கிறது. 
 ஒரு கிராம் வெள்ளி ரூ.41.30 
ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,300 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,303
1 பவுன் தங்கம்       26,424
1 கிராம் வெள்ளி    41.30
1 கிலோ வெள்ளி    41,300
திங்கள்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,265
1 பவுன் தங்கம்    26,120
1 கிராம் வெள்ளி    41.30
1 கிலோ வெள்ளி    41,300
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com