மேலும் 104 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளா?: டிடிவி தினகரன் அதிர்ச்சி 

தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பது குறித்து அமமுக துணை பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் அதிர்ச்சி... 
மேலும் 104 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளா?: டிடிவி தினகரன் அதிர்ச்சி 

சென்னை: தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பது குறித்து அமமுக துணை பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களையே விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 104 கிணறுகளை அமைப்பதை ஏற்க முடியாது. தொடர்ந்து இது பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் மக்கள் விரோத பழனிசாமி அரசு, உடனடியாக தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி அரசைப் போல அறிவிக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com