சுடச்சுட

    

    கணினி பயிற்றுநர் தேர்வு: விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம்

    By DIN  |   Published on : 28th June 2019 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    கணினி பயிற்றுநர் தேர்வு எழுதியவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-2019 ஆம் ஆண்டுக்கான கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 1-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.
     இதற்காக கணினி வழித் தேர்வு கடந்த ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதியவர்கள் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தங்களது user id மற்றும் password-ஐ பயன்படுத்தி www.trb.tn.nic.in எனும் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai