Enable Javscript for better performance
பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    By DIN  |   Published On : 28th June 2019 12:38 AM  |   Last Updated : 28th June 2019 12:38 AM  |  அ+அ அ-  |  

    bamban

    மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் வியாழக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள்.

    மீன்வளத் துறை சார்பில் மானிய டீசல் வழங்கப்படாததைக் கண்டித்து  பாம்பன் பகுதி விசைப்படகு  மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினர்.
    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 112 விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த 15 -ஆம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் இதுவரையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் வழங்கப்படவில்லை. 
    இதனால் மானிய டீசல் இன்றி விசைப்படகுகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகுகள் சங்கத் தலைவர் பாக்கியம் தலைமையில் மீனவ சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    இதில், ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகள் பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் வழங்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மானிய டீசல் வழங்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
    கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவர்கள் இருதயம், ஆரோக்கியம், பவுல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp