வெறும் ரூ.250 செலவில் மழை நீர் சேகரிப்பு மையம்: சென்னைவாசியின் சூப்பர் ஐடியா

அத்தியாவசியத் தேவைக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீரோ சாலையில் ஆறாக ஓடியது. இதனைப் பார்த்த சென்னைவாசிகள் பலருக்கும் மனது லேசாகக் கனத்திருக்கும்.
வெறும் ரூ.250 செலவில் மழை நீர் சேகரிப்பு மையம்: சென்னைவாசியின் சூப்பர் ஐடியா


அத்தியாவசியத் தேவைக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீரோ சாலையில் ஆறாக ஓடியது. இதனைப் பார்த்த சென்னைவாசிகள் பலருக்கும் மனது லேசாகக் கனத்திருக்கும்.

ஆனால் என்ன செய்ய? சொந்த வீடா இருக்கு, மழை நீர் சேகரிப்பு  அமைப்பை ஏற்படுத்த என்று வாடகை வீட்டில் இருப்பவர்களும், இப்போதிருக்கும் செலவில் அதை வேறுச் செய்வார்களா என்று சொந்த வீட்டுக்காரர்களும் புலம்பிக் கொண்டே இருந்தால், பெய்யும் மழை நீரை என்னதான் செய்வது, நமது கண்ணீரோடு கலந்து வழியனுப்பி விடுவதுதானா?

தமிழகத்துக்கு தென் மேற்குப் பருவ மழை பெரிய அளவில் கை கொடுக்காது என்பது நன்கு தெரியும். ஆனால், இந்த காலக்கட்டத்தில் பெய்யும் சொற்ப மழை நீரையும் ஓரளவுக்கு சேகரித்து வைக்கும் வழியை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன்(45) என்பவர் கண்டறிந்துள்ளார். இதற்கு அவர் செய்த செலவு வெறும் ரூ.250.

இரண்டு பிவிசி வளைவு குழாய்களையும், 3 அடி பிவிசி குழாய் ஒன்றும், வெள்ளை துணியும் வாங்கிவிட்டார். தனது மொட்டை மாடியில் இருந்து மழை நீர் வெளியேற்றும் குழாயுடன் பிவிசி வளைவு குழாய், பிறகு நீண்ட பிவிசி குழாயை இணைத்து ஒரு அமைப்பை உருவாக்கினார்.

வாங்கிய துணியை குழாயின் இறுதியில் வட்டிகட்டி போல அமைத்து, அதன் அருகே 225 லிட்டர் பிடிக்கும் டிரம்மை வைத்தார். இதன் மூலம் மழை பெய்யும் போது 10 நிமிடத்தில் 225 லிட்டர் தண்ணீரை இவர் சேகரிக்கு முடியும். இப்படி சேகரித்த மழை நீரைக் கொண்டு அவர் குடும்பத்தினர் பாத்திரங்களை சுத்தம் செய்கிறார்களாம். வீட்டைத் துடைக்கவும் பயன்படுத்துகிறார்களாம்.

முதலில் பெய்த மழை நீரை பூமிக்குள் அனுப்பிவிட்டேன். பிறகு வந்த சுத்தமான தண்ணீரை வீட்டுப் பயன்பாட்டுக்குப் பிடித்துக் கொண்டேன் என்கிறார் மகிழ்ச்சியாக. 

பெரிய அளவிலும் சரி, சின்னச் சின்ன அளவிலும் சரி, மழை நீரை சேமிக்க மக்கள் முயற்சிக்க வேண்டும் என்பதற்கு இவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

இதுபோன்று செய்து வைத்துக் கொள்வதால், மழைக்காலங்களில் மின் துண்டிப்பு ஏற்படும் போதும் தண்ணீருக்காக அலைய வேண்டியதிருக்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com