எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள்: மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிப்பு

தமிழகம் முழுவதும் சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்து சென்னை உயர் நீதிமன்ற
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள்: மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிப்பு


தமிழகம் முழுவதும் சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. 
சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 
இதனையடுத்து பிற மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள பிற மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும். எனவே, இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் இந்த வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள், எம்எல்ஏ, எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாகும். இந்த சிறப்பு நீதிமன்றங்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். விசாரணை தொடர்பான விவரங்களை, மாவட்ட முதன்மை நீதிபதிகள் 
உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com