சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம்: விசாரணை சரியான திசையில் செல்வதாக போலீஸார் தகவல்

சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரத்தில், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை சரியான திசையில் செல்வதாக  போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை
சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம்: விசாரணை சரியான திசையில் செல்வதாக போலீஸார் தகவல்


சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரத்தில், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை சரியான திசையில் செல்வதாக  போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 8 வார காலத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தூப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினார். இந்ச சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார். பின்னர் பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு ரயிலில் சென்றுள்ளார். அதன்படி பிப்ரவரி 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திருக்க வேண்டிய அவரைக் காணவில்லை. மேலும் ஒலக்கூர் ரயில் நிலையம் வரை தொடர்பு எல்லைக்குள் இருந்த அவரது செல்லிடப்பேசியை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை.   இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட  அமர்வில்  வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சுதா ராமலிங்கம், முகிலன் வட இந்தியாவில் இருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் முகநூல் பக்கத்தில் முகிலன் எங்கே, என்ற பதிவுக்கு ராஜபாளையம் காவல் ஆய்வாளர் முகமது கெளஸ், சமாதி என பதில் அளித்துள்ளார். இந்தப் பதிவு எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறி வாதிட்டார். அப்போது சிபிசிஐடி போலீஸார் சார்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் விசாரணை தொடர்பான புதிய அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையைப் படித்து பார்த்த நீதிபதிகள், போலீஸாரின் விசாரணை சரியான திசையிலும், புதிய கோணத்திலும் நடந்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் புதுப்புது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை குறித்த விவரங்களை இந்த சூழலில் வெளியிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,  விசாரணையை 8 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com