சுடச்சுட

  


  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்வில், தேர்ச்சி பெற்ற உதவி வேளாண் அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.
  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் 580 உதவி வேளாண் அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, கடந்த ஏப்ரல் மாதம் 7 -ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் கலந்து கொண்ட 4,158 விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 
  இதில் தேர்வு செய்யப்பட்ட 797 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் இ-சேவை மையங்களின் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டன.  இதைத் தொடர்ந்து தேர்வானவர்கள் தேர்வாணய அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் தகுதியானவர்களுக்கு அன்றைய தினமே கலந்தாய்வும் நடத்தப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.  ஒரே நாளில் 797 தேர்வர்களுக்கு, இணையவழியே பெறப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு உடனடியாக பணி ஆணை வழங்கப்படுவது தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai