சுடச்சுட

  

  தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 1,850 இடங்களுக்கு  392 பேர் மட்டுமே விண்ணப்பம்

  By DIN  |   Published on : 29th June 2019 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


   தமிழகத்தில் 1,850 தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான இடங்களுக்கு வெறும் 392 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
  தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் அரசால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 1,850 இடங்களுக்கு வெறும் 392 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 2019-20ஆம் ஆண்டின் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள், ஜூன் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை, தகுதியான மாணவர்களிடம் இருந்து இணையதளம் மூலம் பெறப்பட்டன.
  இந்தப் படிப்பில் சேருவதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 விழுக்காடும், மற்ற பிரிவினருக்கு 45 விழுக்காடும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 1,070 இடங்களும், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், ஆறு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு கடந்த 24-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 392 மாணவர்கள் மட்டுமே தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai