மீன்வளப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாணவி முதலிடம்

 நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.


 நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
நாகப்பட்டினம்,  தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல் ஜூலை 24-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை இணையதளத்தில் வெளியிட்ட, மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்தது : பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 195.5 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று, புதுக்கோட்டை மாணவி சு. லுமினா முதலிடம் பெற்றுள்ளார். கன்னியாகுமரி மாணவி பா. நேகா இரண்டாமிடத்தையும், திருவண்ணாமலை மாணவர் ஆ. கவுசிகேஷ்வரன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு ஒரு இடத்துக்கு 26 மாணவர்கள் வீதமும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஒரு இடத்துக்கு 11 மாணவர்கள் வீதமும் போட்டியில் உள்ளனர்.
பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆவது வாரத்தில் நடைபெறுகிறது. இளநிலை பட்டப்படிப்புக்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது என்றார் சுக. பெலிக்ஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com